Nov – 2018

Spread the love

தலையங்கம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று எல்லாமே தன் பெயருக்கு முன்பு வரவேண்டும் என்பதை பரிசீலனை செளிணியவேண்டிய நேரம் இது.

கடந்த சில நாட்களாளிணி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பொதுவெளியிலும் பேசுபொருளாயிருக்கிறது கதைத் திருட்டு. சினிமா உருவாகிய காலந்தொட்டே திரைப்படங்களின் கதை குறித்த வழக்குகளும், சர்ச்சைகளும் எழுந்தபடிதான் இருக்கின்றன. இதற்கான தீர்வாக திரைப்படத்துறையில் சங்கங்கள் தொடங்கப்பட்டன.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு கதையின் ‘ஒன்லைனை’ வைத்துக்கொண்டு இயக்குநர் தன்னுடைய உதவி இயக்குநர்களோடு விவாதித்து கதை மற்றும் திரைக்கதை உருவாக்குவதுதான் பல்லாண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றன.

அந்தக் குழுவில் இருக்கும் உதவி இயக்குநர்களும் தங்களுக்கான பயிற்சியாக எண்ணி கதையைப் பற்றி கலந்தாலோசிக்கின்றனர். இதில் சில இயக்குநர்கள் மட்டுமே விதிவிலக்காக கதைக்கான கருப்பொருளிலிருந்து முழுமையான திரைக்கதை வரைக்கும் தனி நபராக உருவாக்குகின்றனர்.  ஏற்கனவே படங்கள் இயக்கிய இயக்குநர்களின் கதை, அவருடைய வட்டம்தாண்டி வெளியில் செல்வதில்லை. ஆனால் உதவி இயக்குநர்கள், கதாசிரியர்கள் தங்களின் கதையை அப்படி மூடி மறைத்து வைக்கஇயலாது. நண்பர்கள் தொடங்கி, நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரிடமும் ஓர் நம்பிக்கையின் அடிப்படையிலேயே கதையினைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்தக் கதையோ அதில்வரும் முக்கியக் காட்சியோ அப்படியே வேறொருவர் இயக்கத்தில் வெளிவரும்போது அவர்களின் எதிர்காலமே கேள்விக்குரியதாகிறது.

முறையான அறிவுசார் சொத்துக்களுக்கான காப்புரிமையின் பயனை திரைப்படத்துறையைச் சார்ந்தவர்களால் நெருங்க முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு பெரும்பாலும் தன்னுடைய கதையைத் திருட்டுக் கொடுத்தவர்கள் பரிகாரமாகக் கேட்பது பணத்தை அல்ல, அங்கீகாரத்தைத்தான். ஏனெனில் திரைப்படத்துறையில் வேறெதைக்காட்டிலும் முக்கியமானது அங்கீகாரம். இதுபோன்று தொடரும் சம்பவங்களால் எழுத்தாளர்கள், திரைக்கதை ஆசிரியர்களுக்கான தேவை தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளதையே காட்டுகிறது.

மு.வேடியப்பன்
ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *