“சினிமாவை உணருங்கள்”

Spread the love

சினிமாவை உணருங்கள்”

தமிழில்: மு. வி. நந்தினி

நவோமி கவாசே (Naomi kawase) ஜப்பானிய இன்றைய தலைமுறை இயக்குநர். ஜப்பானிய கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே இவரது பெற்றோர் விவாகரத்துப் பெற்று பிரிந்து போனதால் உறவினர் வீட்டில் வளர்ந்தார். தனிமையினைக் கடக்க வேண்டி தன்னைச் சுற்றி நிகழ்பவற்றைக் கவனிக்கத் தொடங்குகிறார். குறிப்பாக ஜப்பானிய கிராமங்களின் நிலவியல் அமைப்பு அவரை ஈர்த்திருக்கிறது. அதனைப் பதிவு செய்ய நினைத்து புகைப்படம் எடுக்கக் கற்றுக் கொள்கிறார். அதன்பின் தொலைக்காட்சிக்கான படிப்பு உருவாக்கக் கல்லூரியில் சேர்கிறார். தொலைகாட்சிகளுக்காக குறும்படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்கியவர் திரைப்படங்களை இயக்கத் தொடங்குகிறார்.

இவருடைய படங்கள் யாவும் மனித உணர்வுகளைப் பேசுபவையாகவே இருக்கின்றன. அநேகமும் தொழில்முறை நடிகர்களை அவர் பயன்படுத்துவதில்லை. தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றவர்களை சாலைகளிலும் தெருக்களிலுமே தேடுகிறார். தன்னுடைய படங்கள் எந்த இடத்திலும் இயல்புக்கு மீறாமல் அமைய வேண்டுமென்பதே நவோமியின் விருப்பம். மனிதன் தன்னுடைய அகத்துக்கும் புற வாழ்க்கைக்குமான போராட்டத்தை கையாள்வதே இவரது படங்களின் கருப்பொருளாகின்றன. அதோடு ஒரு தத்துவத்தை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்ற திரைக்கதை பாணி இவருடையது.

பெரும்பாலும் தான் சந்தித்த மனிதர்கள் , தன்னுடைய அனுபவங்கள் போன்றவற்றையே திரைக்கதைகளாக மாற்றுவதால் இவரது படங்களில் பல ஒற்றுமைகளைப் பார்க்க முடியும். அதே சமயம் கதைக்களன்களை இவரால் புதுமையாக மாற்றவும் முடியும்,

இயற்கை குறித்த பிரமிப்பு, இயல்பான வர்ணனைப் போன்றவை இல்லாமல் இவருடைய படங்கள் இல்லை. ஜப்பானின் நவீன முகம் என்பது முதியவர்களையும், இயற்கையையும் மறுதலிப்பதை தன்னுடைய படைப்புகள் மூலம் சுட்டிக் காட்டியபடியே இருக்கிறார். ஜப்பான் ஆண்மைய சமூகமாக இருப்பதையும் இவரது படங்கள் பேசுகின்றன. மிகுந்த வலுவான பெண் கதாபாத்திரங்களை நவோமி தொடர்ந்து படைத்து வருகிறார்.

இவரது படங்கள் சர்வதேச விழாக்களில் மிகுந்த கவனம் பெற்று வருகின்றன. இவர் ஒளிப்பதிவாளரும் கூட.

 

முழுமையாக படிக்க இங்கே

Subscribe for ANNUAL SUBSCRPTION!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *