படத்தொகுப்பு என்பது ஒரு எழுத்துப்பணி

Spread the love

படத்தொகுப்பு என்பது ஒரு எழுத்துப்பணி

தமிழில் மதிமீனாட்சி

வால்ட்டர் முர்ச் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஒலி வடிவமைப்பு மற்றும் படத்தொகுப்பாளராக பணி செய்து வருகிறார். இவரளவுக்கான அனுபவம் வேறெந்த படத்தொகுப்பாளருக்கும் இல்லை. The Godfather, The conversation, Apocalypse Now, The English Patient போன்ற படங்கள் இவர் பணி செய்ததில் குறிப்பிடப்பட வேண்டியவை. படத்தொகுப்பு பற்றிய எந்தக் கேள்விக்கும் எளிமையாக பதில் சொல்லக் கூடியவர். படம் மற்றும் ஒலித் தொகுப்புக்கான உயரிய விருதுகளை வென்றிருக்கிறார்.

•நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் ஒன்று, படங்கள் பார்வையாளர்களின் உணர்வுகளைத் தூண்டிக் கொண்டே இருகிறது என்பது. இதை மட்டும் தான் படங்கள் முன்னெடுக்கின்றன என்கிறீர்களா?

ஆமாம். எது மாதிரியான உணர்வுகளை ஒரு படம் தூண்டுகிறது என்பதில் கவனம் தேவைப்படுகிறது. எந்த மாதிரியான உணர்வினை நாம் தருகிறோம் எப்படித் தரப்போகிறோம் என்பதை ஒரு இயக்குநர் தொடங்கி மற்றவர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முதல் காட்சியின் போது எது மாதிரியான உணர்வினை அந்தக் காட்சி ஏற்படுத்துகிறது, அதன் தொடர்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்பதையும் பட உருவாக்கத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டும். இதோடு ‘லாஜிக்’கும் முக்கியம். இல்லாவிட்டால் படம் புரியாமல் போய்விடக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆக ஒரு கதை அறிவுக்கும் உணர்வுக்கும் இடையில் சமமாக பயணிக்க வேண்டும். உதாரணத்துக்கு ஒரு படத்தில் பார்வையாளர்களை அதிர்ச்சி கொள்ள வைக்க ஒரு கொடூரமான கொலையைக் காட்டிவிட்டு அதற்குத் தொடர்பில்லாத காட்சிகளை அதன் பிறகு தொடர்ந்து கொண்டிருந்தால் குழப்பம் தான் மிஞ்சும்.

முழுமையாக படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *