“கலை என்பது ஆன்மிகச் சடங்கு”

Spread the love

“கலை என்பது ஆன்மிகச் சடங்கு”

தமிழில் : மதி மீனாட்சி

கஸுஹிரோ சூஜி ஜப்பானிய ஒப்பனைக் கலைஞர். உலகின் புகழ்பெற்ற சிற்பி. முகம் என்பது ஆழ்மனதின் வெளிப்பாடு என்பதை தனது கலையாகவே கொண்டிருக்கிறார். ஜப்பான் மற்றும் ஹாலிவுட்டின் பல படங்களுக்கு ஒப்பனைக் கலைஞராக பணி செய்தவர். இவரது படங்களின் பட்டியல் இவரின் சாதனைகளை சொல்கிறது. Sweet Home, Rhapsody in August, Men in black, Men In Black II, Planet of the Apes, Norbit, The Curious Case of Benjamin Button, Angels & Demons – இவை இவர் பணி செய்த படங்களின் சில உதாரணங்களே. யாரும் எதிர்பாராத வேளையில் ‘இனி திரைப்படங்களில் பணி செய்யப்போவதில்லை’ என்று முழு நேர சிற்பியானார். 2017ஆம் ஆண்டு நடிகர் கேரி ஒல்ட்மேன் ஒரு கதாபாத்திரத்தை ஏற்க வேண்டியிருந்தது. சூஜி ஒப்பனைக் கலைஞராக ஒப்புக் கொண்டால் மட்டுமே நடிப்பதாக சொல்லியிருந்தார். தனது நீண்ட கால நண்பரான கேரியின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் திரைத்துறைக்கு வந்தார் சூஜி. The Darkest Hour படம் பேசப்பட்டதற்கும் மேலாக கேரி ஒல்ட்மேனின் ஒப்பனைப் பேசப்பட்டது. 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒப்பனைக் கலைஞர் விருதையும் சூஜிக்குப் பெற்றுத் தந்தது. மீண்டும் திரைத்துறையில் பங்கு பெறும் முடிவில் அவர் இல்லை.
கலைஞனின் ஆழ்மனமே படைப்பில் வெளிப்படுகிறது என்பார் சூஜி. இந்த நேர்காணலிலும் வெளிப்படுவதை நாம் புரிந்து கொள்ளலாம்.

முழுமையாக படிக்க இங்கே கிளிக்கவும்—->http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%28May%252d2018%29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *