ஒரு சூழ்நிலை அமைந்தால் அதைவிட்டு விடாதீர்கள்

Spread the love

ஒரு சூழ்நிலை அமைந்தால் அதைவிட்டு விடாதீர்கள்

– கில்லார்மோ டெல் டோரோ

தமிழில்- சுகந்தி கண்ணன்

 

90வது ஆஸ்கர் திரைப்பட விழாவில் அதிகம் கவனத்தை ஈர்த்த படமாக இருந்தது The Shape of Water. மொத்தம் பதிமூன்று பிரிவுகளில் போட்டியிட்டது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்தகலை இயக்கம், சிறந்த இசைக்கோர்வை என்கிற நான்கு பிரிவுகளில் விருதினை  வென்றிருக்கிறது. இதன் இயக்குநர் கில்லார்மோ டெல் டோரோ. இவர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்.

 

சிறுவயதில் இவரை ஈர்த்த மாயாஜாலக் கதைகள்,. தேவதை கதாபாத்திரங்கள் அதில் வருகிற ‘அரக்கர்கள்’ என இவரது உலகத்தை வசீகரித்திருந்த யாவற்றையும் தனது படங்களில் மீண்டும் கொண்டு வந்தார். Kungfu Panda II, III பாகங்கள் மற்றும் சில முக்கியப் படங்களைத் தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

 

The Shape of Water இவரது இயக்கத்தில் வெளிவந்த பத்தாவது படம். பல விருதுகளை வென்றிருக்கிறது. விமர்சகர்கள், ரசிகர்களை பெருமளவு ஈர்த்திருக்கிறது.

 

படத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்திய விதமும் , குறைந்த பட்ஜெட்டில் திரையில் காட்டிய பிரம்மாண்டமும் அனைவரையும் வியக்கவைத்தன. தயாரிப்பளராகவும் இருப்பதால் திட்டமிட்டு செலவு செய்தால் பெரிய பட்ஜெட் படத்தின் தன்மையைக் காட்சிகளில் கொண்டு வந்துவிட முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார். டெல் டரோ ஆஸ்கர் வென்றதின் மூலம் படம் இயக்குவதற்கும் தயாரிப்பதற்கும் முன்வருபவர்களுக்கு பல நற்செய்திகளையும் நம்பிக்கையும் தந்திருக்கிறார். The Shape of water ஆஸ்கர் வென்ற பிறகான அவருடைய நேர்காணல் இது.

முழுமையாக படிக்க இங்கே கிளிக்கவும் ….http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%28April%252d-2018%29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *